விளைவுள்ள தமிழ்க்கரைசல்
நில்லாமல் பேசுவேன் நிறுத்தாமல் பேசுவேன் உண்ணாமல் பேசுவேன் உறங்காமல் பேசுவேன் குன்றாமல் பேசுவேன் குறையாமல் பேசுவேன் ஆதாரம் எடுத்து வைத்து அறிவார்ந்து பேசுவேன் அடித்தே கூறிடினும் அடங்காமல் பேசுவேன்
இல்லாதோர் எழ வேண்டும் இயலாதோர் எழ வேண்டும் பொய்யர் பொல்லாதார் - என் பேச்சுத் தீக்கிறையாவர் மண்ணில் மடியுமென் சடலம் - ஆகினும் விண்ணோடு ஒலிக்கும் - என் வீரமிகு வசனம்