![]() | நீ என்னை முடக்குகிறாய் நான் உன்னை முடக்குகிறேன் என் முடிதல்கள் எல்லாம் உன்னால் முடக்கப்படும் உன் முடிதல்கள் எல்லாம் என்னால் முடக்கப்படும் வெறிபிடித்த வாழ்க்கைக் குதிரைகளில் முடித்தலும், முடக்கலுமாக நம் வழி இவற்றிற்கான கொடுக்கல் வாங்கல்களிலேயே நம் பரஸ்பரம் |
இந்தப் பிறவியில் நாம் எதிரிகள் என்பதே நிச்சயிக்கப்பட்ட உண்மை நீயும், நானும் விரும்பினாலும், விலகுதலே கட்டாயமான முடிவு நீர் விரும்பினாலும் எரிய முடியாது நெருப்பு விரும்பினாலும் குளிர முடியாது ஒளியோ, இருளோ விரும்பினாலும் ஒன்றை மற்றொன்று அடைய முடியாது 'நண்பா' வெற்றியோ, தோல்வியோ தொடரட்டும் நம் யுத்தம் சந்திக்கலாம் பிறவி முடியட்டும்! - தமிழ் வசந்தன் |
Aug 7, 2010
துருவங்கள்
சுவடு
![]() |
நின்று போன மழைக்குப் பின். . . தொங்கும் தந்திக் கம்பித் துளிகளில். . . வந்து சென்ற வானவில்லின். . . நிறச்சிதறல்கள்! - தமிழ் வசந்தன் |
உண்மை
![]() | ஓவியம் வரைந்திருந்தேன் இரசிக்க முடிவில்லையென்று இருட்டைத் திட்டினார்கள் ஒளிவந்து உணர்த்திவிட்டுப் போனது திட்டப்பட்டது தான் தீட்டப்பட்டிருக்கிறது என்பதை! - தமிழ் வசந்தன் |
குடையும், மழையும்
![]() | தொட எண்ணிப் பொழியப் போக குடையோடு போனது மழை! விடுதலை என்று விரியப் போக மழையாகிப் போனது குடை! - தமிழ் வசந்தன் |
எழுந்து வா
![]() |
திடீரென் றடிக்கின்றக் கண் நடுக்கம் விடுக்கும்! பயந்தால் அழிக்கின்றத் தீ புறத்தைப் பொறிக்கும்! எழுந்தால் திறக்கின்றப் பூ சுகந்தம் சொரிக்கும்! விழுந்தால் தளந்துண்டாகிச் சரீரம் புதைக்கும்! - தமிழ் வசந்தன் |
கரும்புச் சாறு
![]() | உள்ளத்து உள்ளொழுகும் - நீர் குளிருதோ - உடலை வெள்ளத்து வேர்வைதனிலே கழுவினேன் வாட்டத்தை விற்றாற்ற - பற் சுழலிதைத் திருகி தித்திக்குஞ் சாறாக்கினேன் பருகவே! - தமிழ் வசந்தன் |
Subscribe to:
Posts (Atom)